< Back
தமிழக செய்திகள்

மதுரை
தமிழக செய்திகள்
பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஆட்டோ டிரைவர் கைது

30 March 2023 2:00 AM IST
பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் மருதுபாண்டியன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 38). மதுரை பாத்திமா நகரை சேர்ந்தவர் மோகன். ஆட்டோ டிரைவர்களான இவர்களுக்கு இடையே பயணிகளை ஏற்றுவதில் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று இதே போன்று பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் மோகன், ஷாஜகானை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.