< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
பளுகல் அருகேஆட்டோ தீயில் எரிந்து நாசம்
|3 May 2023 11:58 PM IST
பளுகல் அருகேஆட்டோ தீயில் எரிந்து நாசமானது.
களியக்காவிளை
பளுகல் அருகே உள்ள மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் டைட்டஸ் (வயது60), ஆட்டோ டிரைவர். இவர் இரவில் ஆட்டோவை தனது சகோதரர் வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவில் திடீரென ஆட்டோ தீப்பற்றி எரிந்து நாசமடைந்தது. இதுகுறித்து டைட்டஸ் பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை யாராவது மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரித்தார்களா? அல்லது தீ எரிய காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகின்றனர்.