< Back
மாநில செய்திகள்
கர்நாடகாவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு எதிரொலி:  கம்பம்மெட்டு சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கை
தேனி
மாநில செய்திகள்

கர்நாடகாவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு எதிரொலி: கம்பம்மெட்டு சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கை

தினத்தந்தி
|
21 Nov 2022 12:15 AM IST

கர்நாடகாவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கம்பம்மெட்டு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் மங்களூர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. மேலும் இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர், பயணி ஆகியோர் பலத்த காயம் அடைத்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் தமிழ்நாடு-கர்நாடகா எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லைப்பகுதியாக குமுளி, போடி மற்றும் கம்பம்மெட்டு சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பம்மெட்டு சோதனை சாவடியில் ராயப்பன்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கம்பம் வடக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர். இதேபோல குமுளி போலீஸ் சோதனை சாவடியில் லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநில போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்