< Back
மாநில செய்திகள்
ஒரக்காடு ஊராட்சியில் குளம் சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஒரக்காடு ஊராட்சியில் குளம் சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
26 Jun 2022 1:16 PM IST

ஒரக்காடு ஊராட்சியில் குளம் சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியம், ஒரக்காடு ஊராட்சி, கிருதலாபுரம் கிராமத்தில் வீராசாமி குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்ததை ஊராட்சி நிர்வாகம் மீட்டது. குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து ஊராட்சி சார்பில் வீராசாமி குளத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் நீலாசுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கரன், துணைத் தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் பணி தொடங்கப்பட்டது. இந்த குளம் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டு வரும் நிலையில் கரை மண் சரியாமல் இருக்க கற்களை கொண்டு கரையை பலப்படுத்த பணி நடைபெற்று வருகின்றது.

இங்கு நடைபெற்று வரும் பணிகளை சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், வருவாய் துறை அதிகாரிகள், சர்வேயர்கள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்