< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு - இந்து முன்னணி குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு - இந்து முன்னணி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
3 April 2023 1:54 AM IST

இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசு நிறுவனமே தமிழகத்தில் மதம் மாற்றம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சென்னை,

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் மதமாற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசு நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக குறிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மதமாற்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது என இந்து முன்னணி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசு நிறுவனமே தமிழகத்தில் மதம் மாற்றம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. பல்வேறு இடங்களில் அரசு விதிகளுக்கு புறம்பாக வழிபாட்டுத்தலங்களும் உருவாகி வருகின்றன. ஆளுங்கட்சி பிரமுகர்களே பல்வேறு இடங்களில் இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவாக செயல்பட மாவட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அரியலூர் மாணவி தற்கொலை சம்பவத்திலும் மதமாற்றம் தொடர்பில் இருக்கலாம் என்ற காரணத்தினால் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தையே உலுக்கிய அன்புஜோதி சரணாலய முறைகேடுகள் விவகாரத்திலும் மதமாற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்