< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆடி கிருத்திகையை: திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆக.7 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
|5 Aug 2023 10:49 PM IST
ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆக.7 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருவள்ளூர்,
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா வருகிற 7-ந்தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆக.7-10வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளது.
அரக்கோணத்திலிருந்து 25, திருப்பதியில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளன. சென்னை, காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணிக்கு தலா 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.