< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அரசு அங்காடியில் ரூ.19 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் ஏலம்
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அரசு அங்காடியில் ரூ.19 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் ஏலம்

தினத்தந்தி
|
3 Nov 2022 1:00 AM IST

தர்மபுரி அரசு அங்காடியில் ரூ.19 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் ஏலம் போனது.

தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் தினசரி பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். நேற்று 37 விவசாயிகள் 80 குவியல்களாக, 3 ஆயிரத்து 190 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது சராசரியாக ரூ.620-க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.19 லட்சத்து 78 ஆயிரத்து 698 ஆகும். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் ரூ.29 ஆயிரத்து 688 அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்