< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்க துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட 27 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் ஏலம் - கலெக்டர் தகவல்
|4 Aug 2022 2:19 PM IST
மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்க துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட 27 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் ஏலம் விடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்க துறை சார்பில் பறிமுதல் செய்து கைப்பற்றப்பட்ட 27 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி மைய மைதானத்தில் வருகிற 16-ந்தேதி காலை 10.30 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது. மேற்படி ஏலத்தில் தமிழ்நாடு திருத்தப்பட்ட ஆவி (ஸ்பிரிட்) விதி-2000-ன் படி உரிமம் பெற்ற உரிமதாரர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.