பயணிகளே கவனம்...இந்த வழித்தடத்தில் இரவு நேர மின்சார ரெயில் சேவை நாளை ரத்து
|பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த சில வாரங்களாக ரெயில்வே சேவை அவ்வப்போது ரத்து செய்யப்படுகிறது.
சென்னை
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை (2-ந்தேதி) இரவும், 3-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை இரவு 8.15 மணி, 9.15 மணிக்கு சென்டிரல் செல்லும் மின்சார ரெயில், மறுமார்க்கமாக சென்டிரலில் இருந்து இரவு 9.45, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, நாளை மறுநாள் அதிகாலை கும்மிடிப்பூண்டியில் இருந்து 3.50, 4.50 மணிக்கு சென்டிரல் செல்லும் மின்சார ரெயில், சென்டிரலில் இருந்து காலை 5.40, 6.25 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, சூலூர்பேட்டையில் இருந்து நாளை இரவு 8.20, 9.40 மணிக்கு சென்டிரல் செல்ல வேண்டிய மின்சார ரெயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையம் சென்றடையும். சென்டிரலில் இருந்து நாளை இரவு 11.45, 12.15 மணிக்கு ஆவடிக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரெயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.