< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
அடிப்படை வசதி கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை
|14 July 2023 12:00 AM IST
முத்துச்சேர்வாமடம் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதையடுத்து, தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மீன்சுருட்டி கடைவீதியில் முத்துச்சேர்வாமடம் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டும், இருளர் மக்களின் மயான பாதை சாலை வசதி, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் துரை தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து சமூக முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.