< Back
மாநில செய்திகள்
வள்ளியூரில் பள்ளி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வள்ளியூரில் பள்ளி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 Oct 2023 1:50 AM IST

வள்ளியூரில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் மற்றும் வடக்கன்குளத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் சுமார் 13 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் உள்பட 9 ஆசிரியர்கள் மற்றும் 3 அலுவலர்கள் ஊதியம் இன்றி பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கடந்த 2020-ம் ஆண்டு கல்வித்துறை தொடர்பான நியமனம் மற்றும் ஒப்புதல், ஊதியம் ஆகியவை குறித்து வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக மாவட்ட கல்வி அலுவலர்கள் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வள்ளியூர் காமராஜர் சிலை முன்பு பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் சமூகநல அமைப்பின் நிர்வாகிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்