< Back
மாநில செய்திகள்
செயலியில் ஆசிரியர்களின் வருகை பதிவு...அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை
மாநில செய்திகள்

செயலியில் ஆசிரியர்களின் வருகை பதிவு...அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை

தினத்தந்தி
|
2 Aug 2022 12:34 PM IST

அரசுப் பள்ளிகளில் ஆசியர்களின் வருகையை, பழையபடி, பயோமெட்ரிக் முறையிலேயே பதிவு செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை, கல்வித்துறை செயலி மூலம் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும், மாணவர்களின் வருகைப்பதிவை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நகரப்பகுதிகளில் இந்த முறைக்கு பிரச்சினை இல்லை என்றும், ஆனால், சர்வர் மற்றும் சிக்னல் பிரச்சினைகள் உள்ள கிராமப்புறங்களில் இந்த முறையை செயல்படுத்துவது சிரமம் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தொழில்நுட்பம் பழகாத ஆசிரியர்கள் இந்த முறையால் சிரமங்களுக்கு ஆளாவதாகவும் கூறுகின்றனர். எனவே, கொரோனா காரணமாக கைவிடப்பட்ட பயோமெட்ரிக் முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்