< Back
மாநில செய்திகள்
கவர்னர் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு:  அண்ணா பல்கலை. சுற்றறிக்கையால் சர்ச்சை
மாநில செய்திகள்

கவர்னர் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு: அண்ணா பல்கலை. சுற்றறிக்கையால் சர்ச்சை

தினத்தந்தி
|
23 Jan 2024 5:41 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், கவர்னர் விழாவுக்கு வந்தால்தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது சர்ச்சையாகியுள்ளது.

இது குறித்து விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில் ,

மாணவர்கள் வருகை குறித்து நாங்கள் பதிவு செய்யவில்லை. அப்படி சொன்னால் மட்டுமே நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்று சொல்லியிருந்தோம். மாணவர்கள் நாட்டுப்பற்றை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது என தெரிவித்தார்

மேலும் செய்திகள்