< Back
மாநில செய்திகள்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது-திருமாவளவன்
மாநில செய்திகள்

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது-திருமாவளவன்

தினத்தந்தி
|
12 July 2024 12:41 PM IST

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட அரசியல் சதித்திட்டம் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்க வலதுசாரி சனாதன சக்திகள் சதி செய்கின்றன. சிறு வாய்ப்பு கிடைத்தாலும் தமிழ்நாடு அரசுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் எதிராக திருப்புவதில் முனைப்பாக உள்ளனர்.

கூலிக்கு கொலை செய்யும் கும்பலையும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுப்போரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள், கூலிக்கும்பல் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து தண்டிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை - தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட அரசியல் சதித்திட்டம் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பாஜக கோரிக்கை வைக்கிறது. எடுத்த எடுப்பிலேயே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பாஜக தரப்பில் கோரிக்கை வருகிறது ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்துடன் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது.

திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்றனர். கருணாநிதியை கொச்சையாக விமர்சிப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சம். சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் கட்சியினரை கண்காணிக்க கோரிக்கை வைத்துள்ளோம் .நீட் தேர்வு குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினோம். நீட் தேர்வில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளை மறைக்க பாஜக முயற்சித்து வருகிறது" என்றார்.

மேலும் செய்திகள்