< Back
மாநில செய்திகள்
நீட் பயிற்சி அளிப்பதாக கூறி விடுதிக்கு அழைத்து மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி - இளைஞர் மீது வழக்குப்பதிவு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

நீட் பயிற்சி அளிப்பதாக கூறி விடுதிக்கு அழைத்து மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி - இளைஞர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
6 Nov 2023 1:55 AM IST

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி மாணவியை தனியார் விடுதிக்கு வரவழைத்து கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

தருமபுரி பென்னாகரத்தை சேர்ந்த முதுகலை விலங்கியல் பட்டதாரி சக்திதாசன், சேலத்தில் தனியார் மெடிக்கல் சென்டரில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 வயது மாணவி, நீட் தேர்வுக்காக கடந்த 2 ஆண்டுகளாக, சேலத்தில் உள்ள விடுதியில் தங்கி பயிற்சி பெற்றபோது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு பயிற்சி தருவதாக சக்திதாசன் கூறியதை நம்பி, அந்த மாணவி தனியார் விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது, சக்திதாசன், தனது கையில் இருந்த கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது, அவரிடம் இருந்து கத்தியை பறித்து மாணவி குத்தியுள்ளார்.

இருவரும் மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்டதால், அறையில் அலறல் சத்தம் கேட்டு, கதவை உடைத்து ஊழியர்கள் உள்ளே சென்றனர். தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக்திதாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்