< Back
மாநில செய்திகள்
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலியை அறுக்க முயற்சி
விழுப்புரம்
மாநில செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலியை அறுக்க முயற்சி

தினத்தந்தி
|
14 Nov 2022 12:15 AM IST

செஞ்சி அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலியை அறுக்க முயற்சி வாலிபர் உள்பட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

செஞ்சி

செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி கல்யாணி(வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் மகன் முத்துக்குமரன்(23) என்பவர் வீட்டில் நுழைந்து கல்யாணியின் கழுத்தில் கிடந்த தாலியை கத்தியால் அறுக்க முயன்றாா். இதனால் திட்டுக்கிட்டு கண் விழித்த கல்யாணி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த ராமச்சந்திரன் அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் முத்துக்குமரன் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் அய்யப்பன், மூர்த்தி மகன் ரஞ்சித் ஆகியோருடன் தப்பி ஓடி விட்டார். இது குறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துக்குமரன் உள்பட 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்