< Back
மாநில செய்திகள்
கோவிலில் திருட்டு முயற்சி; அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கோவிலில் திருட்டு முயற்சி; அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

தினத்தந்தி
|
24 Jun 2023 1:11 AM IST

கோவிலில் திருட்டு முயற்சி நடந்தபோது அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடினர்.

பெரம்பலூர் கடைவீதி அருகே பூசாரி தெரு சாலையில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை மர்மநபர்கள் அந்த கோவில் கதவின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட முயன்றுள்ளனர். அப்போது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் கோவிலில் திருடாமல் அங்கிருந்து தப்பி சென்றனர். தொடர்ந்து அலாரம் ஒலித்ததால், சத்தம் கேட்டு கோவிலை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் எழுந்து கோவிலுக்கு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்