< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கோவிலின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி
|12 Aug 2023 12:33 AM IST
கோவிலின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தில் அய்யனார், செல்லியம்மனுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டு நேற்று முன்தினம் மர்மநபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் கோவிலில் பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.