< Back
மாநில செய்திகள்
2 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி
கரூர்
மாநில செய்திகள்

2 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி

தினத்தந்தி
|
13 Aug 2023 12:14 AM IST

2 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது.

கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தூர்ராஜ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தூர்ராஜ் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க செந்தூர்ராஜ் வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. ஆனால் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. இதேபோல் பக்கத்தில் உள்ள மற்றொரு கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்களும் சிதறி கிடந்துள்ளது. இதுகுறித்து செந்தூர்ராஜ் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, கடைகளில் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்