< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு கொள்ளை முயற்சி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு கொள்ளை முயற்சி

தினத்தந்தி
|
19 April 2023 2:31 PM IST

செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் டாஸ்மாக் கடையில் சுவரில் துளை போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த கடையின் மேற்பார்வையாளராக முத்துக்குமார் உள்ளார். வழக்கம் போல இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மீண்டும் காலை 12 மணிக்கு கடையை திறக்கும் போது கடையில் உள்ளே இருந்த மதுபாட்டில்கள் சிதறி கிடந்தன. மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளை போட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து எவ்வளவு மது பாட்டில்களும் கொள்ளை போனது என்பது குறித்து மேற்பார்வையாளர் முத்துக்குமார் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டதில் மதுபாட்டில்கள் எதுவும் திருட்டு போகவில்லை என்பது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்