< Back
மாநில செய்திகள்
ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

தினத்தந்தி
|
3 April 2023 12:15 AM IST

பொன்னமராவதி அருகே ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டியில் மூலங்குடியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஜவுளி மற்றும் செல்போன் கடை உள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள 4 கடைகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதில் ரூ.1½ லட்சம் வரை திருட்டு போனதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க ஆறுமுகம் வந்தார். அப்போது ஜவுளிக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது நேற்று முன்தினம் நள்ளிரவு ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் 2 பேர் பணம் மற்றும் ஜவுளிகளை கொள்ளையடிக்காமல் அங்கிருந்து தப்பி சென்றது பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்