< Back
மாநில செய்திகள்
ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சி
கடலூர்
மாநில செய்திகள்

ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சி

தினத்தந்தி
|
12 Jun 2022 9:59 PM IST

ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 63). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர், தனது மனைவி மகனுடன் பண்ருட்டியில் வசித்து வந்தார். மேலும் தணிகாசலம் அவ்வப்போது ஸ்ரீமுஷ்ணம் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தணிகாசலம் வீட்டின் இரும்பு கதவு மற்றும் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி தணிகாசலத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டா் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோ, சுவர் அலமாரி, மேசை ஆகியவற்றை உடைத்துள்ளனர். ஆனால் அவற்றில் நகை, பணம் எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீ்முஷ்ணம் போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபா்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்