திருநெல்வேலி
2 வீடுகளில் கொள்ளை முயற்சி
|பாளையங்கோட்டை அருகே 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்தது.
பாளையங்கோட்டை அருகே உள்ள லட்சுமிநரசிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). இவரும், இவரின் மனைவியும் வெளியூரில் வேலை பாா்த்து வருகிறார்கள். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டின் மாடிக்கதவை உடைத்து புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வீட்டில் பணம், நகை இல்லாததால் அவர்கள் திரும்பி சென்றுள்ளனர். அதேபோல் ஆறுமுகம் வீட்டுக்கு அருகே உள்ள முருகேசன் மனைவி இந்திரா (57) என்பவர் வீட்டுக்குள் முன்பக்க கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த இந்திரா சத்தம் போடவே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.