< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் முயற்சி-எம்.எல்.ஏ. உள்பட 250 பேர் கைது

தினத்தந்தி
|
16 April 2023 12:15 AM IST

சிவகங்கை, காரைக்குடியில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை, காரைக்குடியில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரெயில் மறியல் முயற்சி

ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கியதை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிவகங்கை ெரயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று மதியம் திருச்சியில் இருந்து மானாமதுரைக்கு செல்லும் டெமோ ெரயிலின் முன்பு மறியல் செய்வதற்காக காங்கிரசார் திரண்டனர். சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் தலைமையில் போலீசார் ெரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். ெரயில் நிலைய நுழைவு வாசலில் தடுப்புகளை அமைத்து யாரும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு தடை ஏற்படுத்தினார்கள்.

இந்நிலையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தி தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் முன்னிலையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மா, மாவட்ட பொருளாளர் பழனியப்பன், ராஜேந்திரன், முரளிதரன் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ெரயில் நிலையத்திற்குள் நுழைந்து மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.

கைது

அவர்களை பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சனம் நாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, சுந்தரம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி,மானாமதுரை நகர்தலைவர் கணேசன், வட்டார தலைவர்கள் ஆரோக்கியதாஸ், கரு.கணேசன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:- அதானி மற்றும் மோடி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதன் காரணமாக 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்கை எடுத்து அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கி ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாக ஏற்கப்படும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

காரைக்குடி

காரைக்குடியில் மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். பின் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தபடி ெரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் ெரயில் மறியலில் ஈடுபட முயன்றதாக மாங்குடி எம்.எல்.ஏ., நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், மாநில வக்கீல் பிரிவு இணை செயலாளர் ராமநாதன், மாவட்ட துணைத்தலைவர்கள் காந்தி, அப்பச்சி சபாபதி, மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இமயம் மடோனா, ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சோனை, தேவகோட்டை நகரத்தலைவர் சஞ்சய், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

மானாமதுரை

மானாமதுரையில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சஞ்சய் காந்தி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் திருப்பாச்சேத்தி மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், வழக்கறிஞர் முத்துக்குமார், வட்ட நிர்வாகி சின்னச்சாமி, இளைஞர் காங்கிரஸ் கோடீஸ்வரன், நிர்வாகி பாட்டம் சிவா உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்