< Back
மாநில செய்திகள்
ரெயில் மறியல் முயற்சி; இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ரெயில் மறியல் முயற்சி; இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது

தினத்தந்தி
|
6 April 2023 12:15 AM IST

ரெயில் மறியல் செய்ய முயன்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்,

ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நீக்கம் செய்ததை கண்டித்து ராமநாதபுரத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது. இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செங்கை விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாபா செந்தில், சட்டமன்ற தலைவர்கள் பிரேம்குமார், நகர்தலைவர் சதாம் உசேன், ஏர்வாடி ஜமால், சிக்கல் அமீன், நகர தலைவர் முனியசாமி, விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ரெயில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்