< Back
மாநில செய்திகள்
குன்னம் தபால் நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை காண்பித்து மோசடி செய்ய முயற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குன்னம் தபால் நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை காண்பித்து மோசடி செய்ய முயற்சி

தினத்தந்தி
|
1 Dec 2022 8:35 PM GMT

குன்னம் தபால் நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை காண்பித்து மோசடி செய்ய முயற்சி செய்த பெண் உள்பட 2 பேர் சிக்கினர்.

குன்னம் தபால் நிலையம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு நேற்று மாலை டெல்லி பதிவு எண் கொண்ட காரில் ஆண், பெண் இருவர் வந்துள்ளனர். அவர்கள் காரை குன்னம் தபால் நிலையம் அருகே மறைவான இடத்தில் நிறுத்திவிட்டு, தபால் நிலையத்தின் உள்ளே சென்று வெளிநாட்டு பணத்தை காண்பித்து, இதற்கு இந்திய ரூபாய் நோட்டு கொடுக்கவும் என கேட்டுள்ளனர்.

இதில் சந்தேகம் அடைந்த தபால் நிலைய ஊழியர்கள் பணம் இல்லை என கூறிவிட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் காரில் ஏறி வேகமாக சென்றுவிட்டனர். பின்னர் இதுகுறித்து தபால் ஊழியர்கள் உடனே ஸ்ரீரங்கம் உயர் அதிகாரிகளுக்கும், பெரம்பலூர் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குன்னம் போலீசாரும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 பேர் சிக்கினர்

தகவலின்பேரில் பெரம்பலூர் போலீசார், வெளிநாட்டினர் இருவரும் வந்த காரை பெரம்பலூர் நான்கு ரோடு அருகே மடக்கி பிடித்தனர். விசாரணையில், அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி தபால் நிலையத்தில் இதேபோல் நடித்து ரூ.85 ஆயிரம் திருடியதாகவும், மதுரை கல்லுப்பட்டி தபால் நிலையத்தில் ரூ.24 ஆயிரத்து 800 திருடிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிந்தது. இவர்கள் பெரம்பலூர் மாவட்டம் சித்தளி, பாடாலூர் அம்மாபாளையம் ஆகிய தபால் நிலையங்களில் சென்று திருட முயற்சித்தது தெரியவந்தது.

மேலும் அவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்த கரம் மகன் கூதாரி மஹ்தி (வயது 36) என்றும், சோலம் ரசூல் மகள் மஹ்மதி மினூ (39) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் சுற்றுலா பயணிகள் ஆக இந்தியா வந்தவர்கள் என்றும், இதில் மஹ்மதி மினூ பாஸ்போர்ட் விசா காலாவதி ஆகிவிட்டது என்றும் தெரியவந்தது. மேலும் பெரம்பலூர் போலீசார் மதுரை கல்லுப்பட்டி போலீசாரிடம் இருவரையும் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்