< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சவுதி அரேபியாவுக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி - கேரள இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
|30 Aug 2022 11:39 PM IST
கேரள இளைஞருக்கு போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
சென்னை,
கடந்த 2018 ஆம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது கேரளாவைச் சேர்ந்த மொய்தீன் என்ற இளைஞரிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 535 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக மொய்தீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சவுதி அரேபியாவுக்கு போதைப்பொருளை கடத்த முயன்றது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட், மொய்தீன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.