< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
கருங்கற்கள் கடத்த முயற்சி; 2 லாரிகள் பறிமுதல்
|12 July 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே கருங்கற்கள் கடத்த முயற்சி; 2 லாரிகள் பறிமுதல்
செஞ்சி
விழுப்புரம் மாவட்ட கனிம வளத்துறை மண்டல பறக்கும் படை உதவி இயக்குனர் செல்வசேகர் தலைமையிலான குழுவினர் உலகம் பூண்டி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் கல்குவாரி அருகே 2 டாரஸ் லாரிகளில் சிலர் கருங்கற்கள் ஏற்றிக்கொண்டிருந்ததை பார்த்தனர். இவர்களை கண்டதும் டிரைவர்கள் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். அதிகாரிகள் விசாரணையில் கருங்கற்களை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.