< Back
மாநில செய்திகள்
கழுத்தை அறுத்து பெண்ணை கொல்ல முயற்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

கழுத்தை அறுத்து பெண்ணை கொல்ல முயற்சி

தினத்தந்தி
|
12 July 2023 2:24 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கழுத்தை அறுக்க முயற்சி

சிவகாசி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 23). இவருடைய தாய் அன்னபூர்ணம் (45). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உள்ள மணி (46) என்பவரை பார்த்து விட்டு வருவதாக பிரபாகரனிடம் கூறி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரபாகரன், மணி வீட்டிற்கு சென்றார். அப்போது மணியின் வீட்டு கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது அன்னபூர்ணத்தின் கழுத்தை கத்தியால் அறுக்க மணி முயன்றார்.

தொழிலாளி கைது

அந்தநேரத்தில் பிரபாகரன் உள்ளே சென்றவுடன் மணி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அன்னபூர்ணத்தை உடனே மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி தொழிலாளியான மணியை கைது செய்தனர். எதற்காக அன்னபூர்ணத்தை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்தார் என்பது குறித்து மணியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்