விருதுநகர்
வாலிபரை வெட்டிக்கொல்ல முயற்சி
|வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அய்யனார்காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 27). இவர் நேற்று காலை சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அங்கு வந்த ஏ.வி.டி.பாடசாலை தெருவை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஹரிப்ரியன் (22), முருகேசன் (23), ஜீவா (22), காளியார்குட்டி (22), மணிகண்டன் (23) உள்பட 7 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார் உள்பட 7 பேர் முத்துப்பாண்டியை வாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில் முத்துப்பாண்டிக்கு கழுத்தில் வெட்டு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டியன் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தினேஷ்குமார் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.