< Back
மாநில செய்திகள்
ஆள்மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி - போலீசார் விசாரணை
திருச்சி
மாநில செய்திகள்

ஆள்மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
23 Jun 2023 2:43 AM IST

ஆள்மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமயபுரம்:

சமயபுரம் அருகே உள்ள இருங்களூரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு அந்த ஊரில் சொந்தமாக இடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 60) என்பவரை, திருச்சியை சேர்ந்த 4 பேர் நேற்று மண்ணச்சநல்லூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு காரில் அழைத்து வந்தனர். அங்கு ஆரோக்கியசாமிக்கு சொந்தமான 62 சென்ட் இடத்தை அதே ஊரை சேர்ந்த சங்கர் என்பவருக்கு பவர் பத்திரம் தயார் செய்து பதிவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பத்திரப்பதிவு அலுவலர்கள் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

போலீசார் வருவதை அறிந்து சண்முகசுந்தரத்தை அழைத்து வந்தவர்கள் காரில் தப்பி சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து சண்முகசுந்தரத்தை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்