< Back
மாநில செய்திகள்
கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி;வாலிபர் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி;வாலிபர் கைது

தினத்தந்தி
|
15 April 2023 3:57 AM IST

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றதாக வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.

கடத்தூர், ஏப்.15-

கோபி வண்டிபேட்டையை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 43). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வண்டிப்பேட்டை ஏரி மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் (25) என்பவர் வந்தார். அவர் திடீரென தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய பேனா கத்தியை எடுத்து, ஹக்கீமின் கழுத்தில் வைத்து பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். உடனே அவர் சத்தம் போட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மனோஜை கையும் களவுமாக பிடித்து கோபி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மனோஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்