< Back
மாநில செய்திகள்
சிறுமியை எரித்து கொல்ல முயற்சி:  குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை
தேனி
மாநில செய்திகள்

சிறுமியை எரித்து கொல்ல முயற்சி: குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

தினத்தந்தி
|
4 July 2022 5:35 PM GMT

சின்னமனூர் அருகே சிறுமியை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 19). கடந்த 2-ந்தேதி இவர், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து எரித்து கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட விஜயகுமாரை சின்னமனூர் போலீசார் கைது செய்து தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ராஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் விஜயலட்சுமி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜ் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் சம்பவம் நடந்த பள்ளி வளாகத்தில் சென்று அங்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பணியாளர்கள், பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினர்.

மேலும் சிறுமி படித்து வரும் பள்ளிக்கு சென்றும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, சம்பவம் நடந்த பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகள் அடிக்கடி புகுந்து மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அப்பகுதி பாதுகாப்பற்ற சூழலில் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்த விசாரணை குறித்த விரிவான அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பிக்கப்படும் என்று ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்