< Back
மாநில செய்திகள்
ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

தினத்தந்தி
|
8 July 2023 6:30 PM IST

திருப்பத்தூர் அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் பணம் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம்.மையம்

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மையத்துக்கு நேற்று முன் தினம் இரவு வந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் ேநாக்கில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் உடைக்க முடியாததால் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை அங்கு சென்றவர்கள் ஏ.டி.எம்.எந்திரம் சேதமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விரைவு

தகவல் அறிந்து வந்த கந்திலி போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். கைேரகை நிபுணர்கள் மர்மநபர்களின் கைேரகைகளையும் தடயங்களையும் பதிவு செய்தனர்.

இந்த ஏ.டி.எம்.மில் இரவு காவலாளியோ அல்லது சி.சி.டி.வி. கேமராவோ பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை அடையாளம் காண போலீசார் அந்த பதிவுகளை எடுத்துச்சென்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்