< Back
மாநில செய்திகள்
டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படாததால் மக்கள் அவதி..!
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படாததால் மக்கள் அவதி..!

தினத்தந்தி
|
2 July 2023 1:44 AM IST

திருக்காட்டுப்பள்ளி அருகே மின்கம்பம் நட்டு 6 மாதங்கள் கடந்த பிறகும் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படாததால் மின்தடையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி அருகே மின்கம்பம் நட்டு 6 மாதங்கள் கடந்த பிறகும் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படாததால் மின்தடையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

டிரான்ஸ்பார்மர்

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்செனம் பூண்டி ஊராட்சியில் உள்ள இளங்காட்டுபடுகை, சாளுவன்பேட்டைதெரு கொள்ளிடக்கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்த தெருவின் அருகில் வாழை, நெல் வயல்கள் உள்ளன. இதற்காக விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார்கள் பொருத்தி உள்ளனர். மின்சார பம்பு செட்டுகள் சீராக இயங்க மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் சாளுவன்பேட்டைதெரு அருகில் புதிதாக மின் மாற்றி (டிரான்ஸ் பார்மர்) அமைக்க கம்பங்கள் நடப்பட்டு உள்ளது. கம்பம் நட்டு 6 மாதங்களுக்கு மேலாக இதில் டிரான்ஸ்பாா்மர் பொருத்தப்படவில்லை.

மின்தடை

வீட்டு மின் இணைப்பு மற்றும் விவசாய மின் மோட்டார் இணைப்பு ஒரு மின்மாற்றியில் இருந்து வழங்கப்படுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக இந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள். இதன் அருகே உள்ள மற்றொரு மின்மாற்றியில் இருந்து கழற்றப்பட்ட கருவி வெயில் மழையில் நனைந்து சாலை ஓரத்தில் காணப்படுகிறது. எனவே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்