செங்கல்பட்டு
தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
|கூடுவாஞ்சேரி அருகே தொழிலாளியை தாக்கி பணம் பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் அங்கு மது குடித்து விட்டு தூங்கி கொண்டிருந்த ஒருவரிடம் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மது குடித்து கொண்டிருந்த தொழிலாளி ராமச்சந்திரன் (வயது 45) என்பவரை மர்ம நபர்கள் 2 பேர் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அவரிடமிருந்து ரூ.3 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ராமச்சந்திரன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.