< Back
தமிழக செய்திகள்
கொத்தனாரை தாக்கியவர் கைது
கன்னியாகுமரி
தமிழக செய்திகள்

கொத்தனாரை தாக்கியவர் கைது

தினத்தந்தி
|
10 April 2023 1:19 AM IST

மணவாளக்குறிச்சி அருகே கொத்தனாரை தாக்கியவர் கைது

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே உள்ள உரப்பனவிளையை சேர்ந்தவர் முருகன் (வயது 55), கொத்தனார். இவருடைய மகன் முகேஷ் (25). இவர் கட்டிட தொழிலாளியாக உள்ளார். இந்தநிலையில், சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த உறவினர் விவேக் என்பவரிடம் முகேஷ் மோட்டார் சைக்கிள் இரவல் கேட்டுள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த அபிஷேக், முகேஷின் கன்னத்தில் அறைந்தார். இந்த பிரச்சினையை அவர்களுக்குள் பேசி முடித்தனர். பின்னர் விவேக், ஆனந்த், ஸ்ரீதரன் ஆகியோர் முருகன் வீட்டிற்கு சென்று, அவரை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு கம்பியால் முருகனை தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் படுகாயமடைந்த முருகன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முகேஷ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அபிஷேக், விவேக், ஆனந்த், ஸ்ரீதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விவேக்கை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்