< Back
மாநில செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது தாக்குதல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
17 March 2023 1:08 AM IST

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கீரமங்கலம்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் தனியார் நிலத்தில் உள்ள மீன்குட்டையில் இருந்து மண் எடுத்துக்கொள்ள அனுமதி பெற்று, நேற்று காலை சிலர் வண்டல் மண் வெட்டி எடுத்துள்ளனர். அப்போது அங்கு சென்ற ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செல்வக்குமார் உள்ளிட்டோர், எந்த இடத்தில் மண் கொட்டுவதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ அந்த நிலத்தில் மட்டுமே மண்ணை எடுத்துச்சென்று கொட்ட வேண்டும். வேறு இடங்களுக்கு மண் கொண்டு செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார் உள்பட 4 பேர் சேர்ந்து தாக்கியதில், செல்வக்குமார் காயமடைந்து, அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் செல்வக்குமார் உள்பட 4 பேர் சேர்ந்து, தன்னை தாக்கியதாக கூறி, செந்தில்குமார் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்