< Back
மாநில செய்திகள்
கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - ஜெயக்குமார் ஆவேசம்
மாநில செய்திகள்

'கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்' - ஜெயக்குமார் ஆவேசம்

தினத்தந்தி
|
3 Aug 2024 9:33 PM IST

கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோற்றது என்ற ஒரே காரணத்திற்காக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதி இனவெறியோடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்? மீனவர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது."

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்