< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
சாலையோரம் விபத்து பேரிகார்டு அமைத்தவர்கள் மீது தாக்குதல்
|14 Oct 2022 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையோரம் விபத்து தடுப்பு பேரிகார்டு அமைத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:-
தர்மபுரி அருகே முக்கல்நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). கூலி தொழிலாளியான இவர், காண்டிராக்டர் ஒருவரிடம் வேலை செய்து வந்தார். அதே ஊரை சேர்ந்த வேலு, கிருஷ்ணன் உள்ளிட்ட சிலருடன் பத்திரெட்டிஹள்ளி முருகன் கோவில் செல்லும் சாலையில் ரோடு ஓரத்தில் விபத்தை தடுக்கும் வகையில் பேரிகார்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அங்கு வந்த சக்திவேல், செந்தில்குமார் ஆகியோர் பிரகாஷ் உள்ளிட்டவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பொம்மடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.