< Back
மாநில செய்திகள்
ரியல் எஸ்டேட் அதிபர் மீது தாக்குதல்
சேலம்
மாநில செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
7 March 2023 2:27 AM IST

இரும்பாலை:-

சேலம் இரும்பாலை அருகே உள்ள பெருமாம்பட்டியை சேர்ந்தவர் இடும்பன் (வயது 65). ரியல் எஸ்டேட் அதிபர். திருமலைகிரியை சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவருடைய தம்பி பாலகிருஷ்ணன் (35). இவர்கள் அனைவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்குள் லாப கமிஷன் பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று பெருமாம்பட்டியில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சீனிவாசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் இடும்பனை தாக்கினர். இதுகுறித்து அவர் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சீனிவாசன், பாலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்