< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே ரோந்து பணியின் போது போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்; 2 வாலிபர்கள் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே ரோந்து பணியின் போது போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்; 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
12 Sept 2022 4:52 PM IST

திருவள்ளூர் அருகே ரோந்து பணியின் போது விசாரணையில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரோந்து பணி

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் எதிரே செவ்வாய்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையோரம் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை கவனித்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அவர்களை விசாரணை செய்தனர். அப்போது செவ்வாப்பேட்டை போலீஸ் ஏட்டுக்கள் ஆனந்தபாபு, வினோத்குமார், ரவி ஆகியோர் அந்த 2 வாலிபர்களிடமும் விசாரிக்க சென்றனர்.

2 பேர் கைது

அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இந்தநிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ் ஏட்டு வினோத்குமாரை கையால் தாக்கிவிட்டு 2 பேரும் தப்பியோடினர். இதனால் அவர்களை விரட்டி பிடித்து போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அவர்கள் தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்த ஆதித்யன் (வயது 24) ஆந்திர மாநிலம், திருப்பதி சட்டக் கல்லூரி மாணவரான, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (29) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ரோந்து பணியின் போது போலீஸ் ஏட்டுவை வாலிபர்கள் 2 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்