< Back
மாநில செய்திகள்
சிறுமி திருமணத்தை தடுத்த அதிகாரி மீது தாக்குதல்
கடலூர்
மாநில செய்திகள்

சிறுமி திருமணத்தை தடுத்த அதிகாரி மீது தாக்குதல்

தினத்தந்தி
|
4 Aug 2023 12:54 AM IST

நெய்வேலியில் சிறுமி திருமணத்தை தடுத்த அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசாா் விசாரனை நடத்தி வருகின்றனர்.

நெய்வேலி,

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்த குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் ராஜரிகாமேரி (52), சிறுமியின் வீட்டுக்கு சென்று உங்களது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறீர்களா? என பெற்றோரிடம் கேட்டுள்ளார். அப்போது சிறுமியின் தந்தைக்கும் ராஜரிகாமேரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை ராஜரிகாமேரியை ஆபாசமாக திட்டி தாக்கி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிறுமியின் தந்தை மீது நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்