< Back
மாநில செய்திகள்
பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டவர்களை வீடியோ எடுத்த வக்கீல் மீது தாக்குதல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டவர்களை வீடியோ எடுத்த வக்கீல் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
11 Jun 2023 12:05 AM IST

அன்னவாசல் அருகே பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டவர்களை வீடியோ எடுத்த வக்கீலை தாக்கியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வக்கீல்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கோல்டன் நகரை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் செந்தில்நாதன் (வயது 27). இவர் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு செந்தில்நாதன் புதுக்கோட்டையில் இருந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக ஒரு தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். அந்த பஸ் அன்னவாசல் அருகே உள்ள ஆரியூர் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சபரி, ரஞ்சித் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களை சாலையில் நிறுத்தி பஸ்சை வழிமறித்து டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

வலைவீச்சு

இதனைகண்ட வக்கீல் செந்தில்நாதன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சபரி, ரஞ்சித் உள்ளிட்டோர் செந்தில்நாதனை தகாத வார்த்தைகளால் திட்டி கை மற்றும் சோடா பாட்டிலால் தாக்கியுள்ளனர். மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.6 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதில், படுகாயம் அடைந்த செந்தில்நாதனை சக பயணிகள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து செந்தில்நாதன் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்