< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
விவசாயி மீது தாக்குதல்
|18 Aug 2023 12:15 AM IST
முத்துப்பேட்டை அருகே சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் அக்கரஹார தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது59). விவசாயி. இவருக்கும், அதே ஊர் வேம்பையாநகர் பகுதியை சேர்ந்த மனோகரன் (62) என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மனோகரன், பாலசுப்பிரமணியனை சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த பாலசுப்பிரமணியன் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.