< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல்
|4 Oct 2023 3:04 AM IST
திருக்காட்டுப்பள்ளியில் மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருக்காட்டுப்பள்ளி;
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பள்ளிவிடை கிராமத்தை சேர்ந்தவர் அருண்அந்தோணிராஜ் (வயது33). திருக்காட்டுப்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வரும் இவர் திருக்காட்டுபள்ளி அருகே நடுப்படுகை சாலையில் உள்ள மின் மாற்றியை சீரமைக்க சென்றார். அப்போது மின் மாற்றி அருகே வசிக்கும் மோகன்ராஜ் (22) மின்சார வாரிய ஊழியரை வழிமறித்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த அருண்அந்தோணிராஜ் திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.