< Back
மாநில செய்திகள்
லிப்ட் கேட்டு மின் ஊழியர் மீது தாக்குதல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

லிப்ட் கேட்டு மின் ஊழியர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
18 Oct 2023 12:15 AM IST

சங்கராபுரம் அருகே லிப்ட் கேட்டு மின் ஊழியரை தாக்கிய வாலிபரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் பூட்டை ரோடுபகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் கண்ணன்(வயது 45). வடபொன்பரப்பி இளமின் பொறியாளர் அலுவலகத்தில் மின்சார ஊழியராக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். மைக்கேல்புரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது வாலிபர் ஒருவர் கண்ணனிடம் லிப்ட் கேட்டார். உடனே அவர் சிறிது தூரம் தள்ளி சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போன் செய்து தனது நண்பரை வரவழைத்து இருவருமாக சேர்ந்து கண்ணனை அசிங்கமாக திட்டி தாக்கி அவரது செல்போனை பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் லிப்ட் கேட்டு கண்ணனை தாக்கியவர்கள் மங்கலம்பகுதியை சேர்ந்த விரேந்திரசேவாக்(வயது 21), இவரது நண்பர் சீர்ப்பனந்தல் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் விவேக்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்