< Back
மாநில செய்திகள்
கிரிக்கெட் விளையாடியவர்கள் மீது தாக்குதல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கிரிக்கெட் விளையாடியவர்கள் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
19 July 2022 12:51 PM IST

திருவள்ளூரில் கிரிக்கெட் விளையாடியவர்களை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுத்தொடர்பாக 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி கிராமம் நெல்லிக்குன்றம் தெருவில் வசித்து வருபவர் ஜெயராமன். இவரது மகன் அண்ணாமலை (வயது 29). இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அத்திமாஞ்சேரி பேட்டை பாரதி நகர் பகுதியை சேர்ந்த கொண்டய்யா என்பவர் அங்கு வந்து கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் அண்ணாமலையும் அவரது நண்பர் கீர்த்தியும் சேர்ந்து அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கொண்டையா தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பீர் பாட்டில்களால் அண்ணாமலையையும் அவரது நண்பர் கீர்த்தியையும் தாக்கி உள்ளார்.

தகவலறிந்து வந்த அண்ணாமலையின் நண்பர்கள் கொண்டையா தரப்பினரை தாக்கி உள்ளனர். இதில் சங்கர், சீனிவாசன் என்பவர்கள் காயம் அடைந்தனர். இதுபற்றி அண்ணாமலை பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வழக்குப்பதிவு செய்து கொண்டய்யாவை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்