< Back
மாநில செய்திகள்
`ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியதற்காக பாஜக நிர்வாகி மீது தாக்குதல் - ஆம்பூர் அருகே பரபரப்பு
மாநில செய்திகள்

`ஜெய் ஸ்ரீ ராம்' என்று கூறியதற்காக பாஜக நிர்வாகி மீது தாக்குதல் - ஆம்பூர் அருகே பரபரப்பு

தினத்தந்தி
|
28 Jan 2024 8:54 PM IST

பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் 1-ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் உள்ள உணவகத்தில் பாஜக வேலூர் மாவட்ட செயலாளர் லோகேஷ் சாப்பிட சென்றுள்ளார். அப்போது உணவக ஊழியரிடம் பரஸ்பரம் 'ஜெய் ஸ்ரீ ராம்' என கூறியதாக தெரிகிறது. உடனே அருகில் இருந்த சிலர், இங்கு எதற்கு ஜெய் ஸ்ரீ ராம் என எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், சில இளைஞர்கள் லோகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த லோகேஷ் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்