விருதுநகர்
ரோந்து பணிக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்
|வத்திராயிருப்பில் ரோந்து பணிக்கு சென்ற போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் ரோந்து பணிக்கு சென்ற போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் முனியாண்டி (வயது35). இவர் சம்பவத்தன்று வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் ரோந்து பணிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாரதி (24), ரஞ்சித்குமார் (25), முத்துக்குமார் (26), வசந்த் (24), வினீத் (23) ஆகிய 5 பேரும் சேர்ந்து எங்கள் தெருவிற்கு ஏன் வந்தீர்கள். எங்கள் பகுதியில் ரோந்து வரக்கூடாது என போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் போலீஸ்காரர் முனியாண்டி மீது கம்பு, கற்களை வீசி 5 பேரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
5 பேர் கைது
இதுகுறித்து போலீஸ்காரர் முனியாண்டி வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாரதி, ரஞ்சித்குமார், முத்துக்குமார், வசந்த், வினீத் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.